
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் இயக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ உடைந்த உறவுகள் மற்றும் நம் வாழ்வில் காதலைக் கண்டறியும் வழிகளைப் பற்றிய கதை. விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளர்கள்.
இயக்குனராகும் ஆசையில் உதவி இயக்குனரான ருத்ரா நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்ல வருகிறார், அவர் சொன்ன 2 கதையும் பெரிதாக பிடிக்காமல் ஒரு காதல் கதையை கேட்கிறார் விஷ்ணு.
உடனே ருத்ரா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல் வாழ்க்கையையே ஒரு கதையாக சொல்ல சந்தோஷமாக செல்லும் காதல் கதை, சில மனக்கசப்புகளால் இருவரும் பிரிந்து விட்டதையே கிளைமாக்ஸ் காட்சியாக சொல்லி முடிக்கிறார்.

இது தான் கிளைமேக்ஸ் என விஷ்ணுவிடம் சொல்ல, விஷ்ணு இது இடைவேளை, இரண்டாம் பாதிக்கு நீ உன் காதலியை கண்டிப்பாக சந்தித்து அங்கு என்ன நடக்கிறது அது தான் இரண்டாம் பாதி என சொல்ல, வேறு வழியில்லாமல் ப்ரேக் அப் ஆன காதலியை ருத்ரா சந்திக்க செல்ல பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
‘சினிமாவுக்குள் சினிமா’ என்ற ஃபார்மேட்டில் காமெடி, காதல், எமோஷன் என்ற பார்முலாவில் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.

ஆனால் இதில் முதல் இரண்டு காதல் கதைகளும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜாலியாக சீக்கிரமாக முடிந்தாலும், அதில் தன்பாலின ஈர்ப்பாளர்களை வைத்துவரும் நகைச்சுவையைத் தவிர்த்திருக்கலாம். வழக்கமான காதல் கதை என்றாலும், புதுமையான கதைக்களத்தில் ரசிக்கும்படியாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார்.
ருத்ரா பள்ளி மாணவனாகவும், காதலி ஏமாற்றும் போது துவண்டு போவதும், பெற்றோர்கள் சண்டை போடும் போது கண்டு கொள்ளாமல் செல்வதும் என அனுபவம் பெற்ற நடிகனை போல் நடிதுள்ளார்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஜென்மார்ட்டின் இசையில் இளமை துள்ளலான பாடல்கள் ரசிப்பு.
மொத்தத்தில் படம் ஆரம்பித்த எனர்ஜியை இறுதிவரை கொண்டு சென்றிருந்தால் “ஓஹோ எந்தன் பேபி-யை வா எந்தேன் பேபி” என்று கொண்டாடி இன்னும் ஜாலியாக ரசிகர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்.