
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மற்றும் சமூக வலைதளத்தில் ஏதோ ஒரு வகையில் பேசுப்பொருளாகவே இருக்கும் வனிதா விஜயகுமார் 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
மேலும் தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தை ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படம் ஒரு அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, விஷ்ணு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாண்டியின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார்.
பெண்களின் வாழ்க்கை சவால்களையும், தாம்பத்ய உறவுகளையும் மற்றும் நாற்பது வயது பெண்ணின் குழந்தை பெறும் கனவு அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து பேசும் படம்.

படத்தின் முதல் பாதி முழுக்க பாங்காங்கிலும், இரண்டாம் பாதி இந்தியாவிலும் நடக்கிறது.
செக்ஸ், சென்டிமென்ட், காமெடி, எமோஷன் என சகலத்துக்கும் தீனிபோடும் வகையில் தன்னுடைய வயது, உடலுக்கு பொருத்தமான ஒரு கேரக்டரை உருவாக்கி, அதில் தானே நடித்து, இயக்கி,அசத்தியிருக்கிறார் வனிதா.
கதை தேர்வு சிறப்பாக இருந்தாலும், அதை சொல்லிய விதம் அவ்வளவு நன்றாக இல்லை. படத்தை பற்றி சொல்லும் அளவிற்கு எதுவுமே இல்லை. மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை ரீமேக் செய்தது மட்டும் தான் கேட்கும்படி இருந்தது.

பெண்களை மையப்படுத்திய கதைகளை விரும்புவோருக்கும் வேண்டுமென்றால் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம்.