ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் 1993 ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. ஜுராசிக் பார்க்-கில் அடுத்ததடுத்த 5 பாகங்கள் உருவாகியது.

தற்போது 7 -வது பாகமான ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தை 2010ம் ஆண்டு மான்ஸ்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கேரத் எட்வர்ட்ஸ் காட்ஸில்லா, ரோக் ஒன்: ஸ்டார் வார்ஸ், தி கிரியேட்டர் படங்களை தொடர்ந்து பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அவெஞ்சர்ஸ், பிளாக் விடோ, அயன்மேன் போன்ற திரைப்படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்திருக்கிறார் மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது மற்றும் தமிழில் 3டியில் வெளியாகியுள்ளது.

ஸ்பீல்பெர்க் உருவாக்கிய ஒரு உலகம் பல ஆண்டுகள் கழித்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் இருக்கிறது, எத்தனை பாகங்கள் உருவாக்கினாலும்.

மேலும் படம் முழுக்க இயக்குனர் கரேக் எட்வர்ட்ஸ் விஷுவல் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

சுமார் 1500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கியுள்ளது மேலும் ப்ரீமியர் ஷோ மூலமாகவே 30 மில்லியன் வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் வந்துள்ளதாக கூறுபடுகின்றன.

இப்படத்தில் ஹீரோயின் மற்றும் சக நண்பர்களின் தியாகங்கள் அதில் குறிப்பாக அசைவ டைனோசர் அட்டகாசங்களை சைவ டைனோசர்ஸ் மற்றும் அழகிய குட்டிகளுடன் நதி, மலை, கடல், காடு போன்ற இடத்தில் டைனோசர்களுடன் போராடும் டீம்-யின் உணர்வுகளை கொண்டு திரில்லராகவும் வியப்பாகவோம் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு பகுதிக்கு செல்ல ஒரு குடும்பம் போட்-ல் செல்கிறது, அவர்கள் சென்ற போட் சில டைனோசர்களால் தாக்கப்பட, அவர்களை அந்த டைனோசரிடம் இரத்தம் எடுக்க செல்லும் குழு காப்பாற்றுகிறது.மிகப்பெரும் டைனோசர் தாக்குதலால், இவர்கள் அனைவரும் டைனோசர்கள் வாழும் தீவில் மாட்டிக்கொள்ள பிறகு என்ன ஆனது என்பதல் சாகசங்களே இந்த Jurassic World Rebirth.

இப்படத்தில் மேலும் ஜான் மெத்தல்சன் ஒளிப்பதிவும், ஜான் வில்லியம் இசையும் விறுவிறுப்பை கூடுகின்றன. இக்கதையில் பெரிய திருப்பங்கள் இல்லை என்றாலும் படத்தின் காட்சியமைப்பு, திரைக்கதை, பிரமாண்டம், ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் இவை அனைத்தும் தருகின்றன உணர்வும் மற்றும் ஆச்சிரியம் தான் படத்தின் பிளஸ்.