
Rain Of arrows Entertainment நிறுவனம் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் மற்றும் பாபு குமாரின் ஒளிப்பதிவில் பிக் பாஸ்(தமிழ்) சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படம் இளமை நிறைந்த காதல் – நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஜெயமோகனுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை வெள்ளித்திரையில் தந்துள்ள படம் என்று தான் சொல்லவேண்டும்.
இப்படத்தில் ராஜுவுக்கு 2 ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். முதலில் ஜோ படத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவ்யா-நந்தினி கதாபாத்திரத்திலும், இன்னொரு ஹீரோயின் ஆத்யா-மதுமிதா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் தேவதர்ஷினி, அப்பாவாக சார்ளி மேலும் விஜய் டிவி பப்பு மற்றும் கேமியோ ரோலில் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கின்றது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

இன்றைய ஜெனரேஷன் எப்படி எல்லாம் காதல், நட்பு என்ற பெயரில் செய்யும் சேட்டைகளை படமாக உருவாகியுள்ளது.
‘பன் பட்டர் ஜாம்’ படம் இளைஞர்களுக்கு ஒரு புதுமையான, உற்சாகமாக காதல் கதையை வழங்குகிறது. புது புது கேரக்டர் அறிமுகம், காமெடி திருப்பம் என கதை விறுவிறுப்பாக இருக்கின்றன.

வீடு, கல்லூரி, காதல் சம்மந்தப்பட்ட சீன்கள் மற்றும் கிளைமாக்ஸ் வசனங்கள் இப்படத்திற்கு ‘ஒரு யூத்புள்’ அனுபவத்தை தருகின்றன.
ஆனால் படம் முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் உள்ளன. லாஜிக் எல்லாம் பார்க்காமல் நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க ஒரு நல்ல படமாக கண்டிப்பாக இருக்கும்.
