கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தின் மூலம் கோலிவுட் நடிகை மாளவிகா மோகனன் தமிழில் களமிறங்கினார்.
பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
தற்போது விக்ரமின் ‘தங்கலான’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்காக சிலம்பம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார் சிலம்ப பயிற்சி எடுக்கும் காணொளியை அப்பொழுது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து அவர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.