சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல், அவரது உயிரின் மேல் எந்த அக்கறையும் இல்லாதபோல நடந்து கொண்டதாக புற்றுநோய் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் அவர்களை சந்தித்து சண்டையிட்ட விக்னேஷ், திடீரென கத்தியால் அந்த மருத்துவரை முகம், காது , முதுகு என்று பல இடங்களில் குத்தியுள்ளார். உடனே மருத்துவமனை அரசு பணியாளர்கள் அவரை புடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது மருத்துவர் Dr. பாலாஜி ஜெகநாதன் சிகிச்சை பெற்று வருகிறார், ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு மயக்கம் தெளிய 8 மணிநேரம் ஆகும் என்று சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் சார்பில் கூறப்படுகிறது.
முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில்.
உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு எவ்வாறு நடப்பது மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. Dr.பாலாஜிக்கு அணைத்து சிகிச்சையும் முறையாக கொடுக்கப்படும், மேலும் இந்த தவறை செய்த விக்னேஷ் மற்றும் உறவினர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டம்.
மருத்துவருக்கு எதிராக நடந்த இந்த மிக பெரிய கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மட்டும் கலந்துகொள்ள மாட்டார்கள் மற்ற அணைத்து மருத்துவர்களும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம்
சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷ் தாயார் உடல் நன்றாக உள்ளது, முறையாக கவதித்து வருகிறார்கள், ஏன் எவ்வாறு அவர் செய்தற் என்பது விரைவில் விசாரணையில் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
தற்போது காவல்துறை விசாரணை நடந்து வருகிறது விரைவில் சரியான தகவல்கள் வெளியாகவும் என்று எதிர்பார்க்க படுகிறது.