இந்தியா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கேரளா மண்ணில் இருந்து ஸ்ரீசாந்த்க்கு பிறகு ஜொலிக்கும் ஒரு இந்தியா கிரிக்கெட் வீரர்.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசி அதிரடி காட்டியுள்ளார் ஆனால் அடுத்தடுத்த போட்டியில் பூஜ்ய ரன்களில் ஆட்டம் இழந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் சாம்சன் கூறியதாவது.

எனது மகன் 2015 ஆம் ஆண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா அணிக்கு அறிமுகம் ஆனார், ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகளை கேப்டனாக இருந்த தோனி கொடுக்கவில்லை , அதற்க்கு பின்னர் வந்த விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் யாரும் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் எனது மகனின் முக்கியமான முதல் 10 வருடங்களை வீணடித்து விட்டார்கள். இந்த நான்கு பேர்தான் எனது மகன் வெற்றிக்கு முக்கிய தடையாக இருந்தார்கள்.

தற்போது சூரிய குமார் யாதவ் மற்றும் கவுதம் கம்பிர் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்ஸன்க்கு நன்றாக வாய்ப்பு கிடைக்கிறது. இதை சரியாக சஞ்சு சாம்சன் பயன்படுத்துவர் என்று தந்தை விஸ்வநாத் சாம்சன் கூறியுள்ளார்.