2023 ஆம் ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  பிரமாண்ட வெற்றிய பதிவு செய்த ஜெய்லர் படத்தில் மாபெரும் வெற்றி பெற்ற காவாலா பாடல் தற்போது போது யூடிப்பில் 25 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் சமீபத்தில் அதிகமாக ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்ட பாடல் காவாலா, இந்த பாடல் முக்கிய வெற்றி அடைய நடிகை தமன்னாவின் நடனம் மற்றும் அவரது அழகு, அதன் பின்னர் அனிருத் ரவிச்சந்திரன் இசை, இந்த இரண்டு பாடலை உலகறிய செய்துள்ளது.

யூடிப்பில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை கடந்தது காவாலா, இதுவரை தமிழ் சினிமாவில் யூடிப்பில் அதிக பார்வையாளர்களை கடந்த பாடல் வரிசையில் தனுஷ் நடித்த 3 படத்தின் Why This Kolaveri பாடல் 46 கோடி பார்வையாளர்கள் இரண்டாவது இடத்திலும், நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் 63 கோடி பார்வையாளர்களுடன் முதல் இடத்திலும் உள்ளது.

காவாலா பாடல் வீடியோ :

அரபி குத்து பாடல் 

Why this Kolaveri பாடல்