லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் ( Vidamuyarchi Teaser ) வெளியாகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

அஜித் குமார் அவர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் மற்றொரு படமான குட் பேட் அக்லி தான் முன்னாள் ரிலீஸ் ஆகும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென விடாமுயற்சி டீசர் குறித்து அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.