சென்னையில் மக்கள் உணர்வுகளை சார்ந்த பல அடையாளங்கள் உள்ளது, அதில் பழைமை வாய்ந்த உதயம் தியேட்டரும் ஒன்று.

"வேட்டையன் படம் கடைசி படம் என்பது தவறு, அடுத்து தீபாவளிக்கு அமரன் படமும் வருகிறது. உதயம் தியேட்டர் கடைசி படம் எது எப்போது இடிக்கப்படும் என்பதெல்லாம் முடிவாக இன்னும் 6 மாதங்கள் ஆகும், அதுவரை படம் வெளியாகும்" என்று திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.
CHENNAI UTHAYAM THEATER

“உதயம் தியேட்டர்ல என் இதயத்தை தொலைச்சேன்… ” என்று பாடல்கள் சொல்லும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது இந்த உதயம் தியேட்டர் என்று.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் பிறகு உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன, அதாவது உதயம் திரையரங்கம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்புகள் வர உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், உதயம் தியேட்டர் ஓனர் கூறியதாவது.

“வேட்டையன் படம் கடைசி படம் என்பது தவறு, அடுத்து தீபாவளிக்கு அமரன் படமும் வருகிறது. உதயம் தியேட்டர் கடைசி படம் எது எப்போது இடிக்கப்படும் என்பதெல்லாம் முடிவாக இன்னும் 6 மாதங்கள் ஆகும், அதுவரை படம் வெளியாகும்” என்று திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.

எனவே வேட்டையன் படம் கடைசி படமல்ல, இந்த உதயம் தியேட்டர் இன்னும் சில காலங்களுக்கு நம்முடன் பயணிக்கும்….