
இந்தியாவில் பல்வேறு தரப்பான விருதுகள் உள்ளன, ஒவ்வொரு விருதுக்கும் ஒரு மதிப்பு இருக்கும் எந்த விருதுகளாக இருந்தாலும் அந்த விருது பெற்ற கலைஞர்க்கு ஒரு உணர்வு இருக்கும், அது அவர்கள் கடந்து வந்த பாதைக்கு கிடைத்த அங்கிகாரமாக ஆனந்த கண்ணீருடன் ஒரு இனம்புரியாத உணர்வை கொடுக்கும் அது சொன்னா புரியாது.
அந்த வகையில் உலகிற்கு ஆஸ்கார் விருது எப்படியோ அதே போல இந்தியாவிற்கு நமது அரசால் வழங்கப்படும் தேசிய விருது மிக பெரிது, ஒவ்வொரு கலைஞனின் கனவாக இருக்கும் விருதும் இதுவே.
தற்போது 70வது தேசிய விருதுகள் வழங்கப்பட்டன, அதில் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகையாக நடித்த நித்யா மேனன்க்கு வழங்கப்பட்டது.
தேசிய விருதை பெற்ற மகிழ்ச்சியில் இந்த விருது எனது சினிமா பயணத்திற்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம், இந்த விருதை திருச்சிற்றம்பலம் படக்குழுவினர்க்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார் நித்யா மேனன்.
அதன் பின்னர் தனது சினிமா பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் முடிந்த ஆதரவு கொடுத்த பெற்றோர்களுக்கு இந்த விருதை சமர்ப்பித்து அவர்களை மகிழ்விக்க செய்து புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் நித்யா மேனன்.