
தமிழ் சினிமாவில் இருந்து உலக சினிமாவிற்கு மாபெரும் படைப்பை கொடுக்கும் நோக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சூரிய நடிப்பில் சிறுத்தை சிவா அவர்கள் பிரமாண்டமாக உருவாக்கிவரும் கங்குவா திரைப்படம்,

இந்த படம் எளிதாக 2000 கோடி வசூல் செய்யும் என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா கூறினார். தற்போது படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது கங்குவா. இதன் விளம்பரம் உலக முழுவதும் செய்து வருகிறது படக்குழு.
இந்நிலையில் மிக பெரிய பட்ஜெட் படம் என்பதால் திரையரங்குகள் அதிகம் கிடைக்க வேண்டும் மற்றும் படத்தின் காட்சிகள் அதிகம் இருக்க வேண்டும். அதற்காக படக்குழு முழுமையாக கவனம் கொடுத்து வருகிறது .
தற்போது சில மாநிலங்களின் அதிகாலை காட்சிகளுக்காக அந்தந்த மாநில அரசிடம் ஒப்புதல் வாங்கியுள்ளது படக்குழு.

மாநிலம் | காட்சிகள் |
---|---|
தமிழ்நாடு | இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை |
பாண்டிச்சேரி | இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை |
கேரளா | அதிகாலை 4 மணி ஷோ |
கர்நாடக | அதிகாலை 4 மணி ஷோ |
தெலுங்கானா | அதிகாலை 4 மணி ஷோ |
ஆந்திர | அதிகாலை 4 மணி ஷோ |
மகாராஷ்டிரா | அதிகாலை 5.30 மணி ஷோ |
டெல்லி | இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை |
குஜராத் | இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை |
பஞ்சாப் | இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை |