
அமரன் படத்தின் சிறப்பாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு ஆர்மி ஆபிஸர் ட்ரைனிங் அகடமி சார்பாக கௌரவ விழா.
இந்த வருடம் தீவாளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் ( Amaran )திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் 320 கோடியை கடந்து செல்கிறது. தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மிக பெரிய லாபத்தை அடைந்த திரைப்படம் என்ற பெருமையும் அடங்கும்.

மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்
இந்த படத்தின் கதை தேசத்துக்காக உயிர் கொடுத்த மேஜர் முகுந்த் வரதராஜன் (Major Mukund Varadharajan ) வாழ்க்கை வரலாறு. இந்த படத்தில் அற்புதமாக அருமை ஆஃபீசராக நடித்துள்ளார், நடிப்பால் முகுந்த் வரதராஜன் அவர்களையே கண் முன் நிறுத்தினர் என்று கூறலாம், இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு வகையில் வாழ்த்துக்கள் வந்தது.
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றில் நடித்து நடிப்புக்கு சர்டிபிகேட் வாங்கிட்டாரு என்று கூறலாம்.

ஆர்மி ஆபிஸர் ட்ரைனிங் அகடமி சார்பாக கௌரவ விழா
தற்போது சிவகார்த்திகேயன் அவர்களுக்கு 27 நவம்பர் 2024 அன்று சென்னையில் ஆர்மி ஆபிஸர் ட்ரைனிங் அகடமி (ARMY Officers Training Academy ) சார்பாக ஒரு ஆர்மி வீரராக சிறப்பாக நடித்ததற்காக அதுவும் ஒரு மேஜர் ஆபிசர் கதாபாத்திரத்தில் அப்படியே நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்த காரணத்தால், சிவகார்த்திகேயனுக்கு கௌரவ விழா நடத்தி அவரது நடிப்புக்கு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளார்கள்.

உழைப்புக்கு சரியான அங்கீகாரம்
இந்த கௌரவ விழா சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய பெருமையாகும். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிக பெரிதாக இருக்கும் என்பதற்கு அமரன் திரைப்படம் ஒரு உதாரணம்.
இது உழைப்பால் உயர்ந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அவருக்கு அன்பு மக்கள் கொடுக்கும் பரிசு.





