கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை புதிதாக தொடங்கினார்.
அதனை தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சியின் பெயரை பதிவு செய்தார்.
மேலும் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன மற்றும் இதற்க்கு ஆன்லைனில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதால் சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய உறுப்பினர்களாக இதுவரை கட்சியில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகின்றது.
தற்போது புதிதாக காவல் நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமித்து மக்களுக்கு சட்ட உதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு த.வெ.க. வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள்.
மேலும் இந்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.