
சாதனை பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.
நாற்பது ஆயிரத்திற்கும் மேல் பாடல்கள் பாடி – “உலக சாதனை” படைத்த ஒரு லெஜெண்ட் SP பாலசுப்ரமணியம் ( SP Balasubrahmanyam ) அவர்களின் வாழ்க்கை வரலாறு ( Biography ) மற்றும் சாதனைகளை இங்கு பார்க்கலாம்.

SPB பெற்றோர்கள் மற்றும் சொந்த ஊரு
SP பாலசுப்ரமணியம் அவர்கள் 1946-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, எஸ்.பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு “ஹரி கதா” கலைஞர், இவர் 2 சகோதரர்கள் 5 சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்துள்ளார். பிரபல பின்னணி பாடகி SP சைலஜா அவர்கள் SPB-யின் சகோதரி ஆவார்.

SPB கல்லூரி பட்டப்படிப்பு
தன் தந்தையின் ஆசைக்காக இவர் ஆந்திராவில் JNDU பொறியில் கல்லூரியில் சேர்ந்து படித்தார், டைபாய்டு காய்ச்சல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பிறகு சென்னை இடம்பெயர்ந்து கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்தார் SPB.

SPB அவர்களின் குடும்பம்
SPB அவர்கள் திருமதி சாவித்ரி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, பல்லவி மகள் மற்றும் SP சரண் மகன் பிள்ளைகள் ஆவார்கள். இவரது மகன் மற்றும் மகள் இருவருமே சிறந்த பாடகர் ஆகும், தலைமுறை தலைமுறையாக இசை குடும்பம் என்று கூறலாம்

SPB இசையின் ஆரம்பம்
SPB அவர்கள் தன் தந்தையை பார்த்து இளம் வயதிலேயே இசை மேல் உள்ள ஆசையால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார்.
இசையின் மீது அவருக்குள் இருந்த ஈர்ப்பினால், கல்லூரியில் “மெல்லிசை குழு” என்று ஆரம்பித்து பாடல்கள் பாடுவார் SPB , இக்குழுவில் இளையராஜாவும் ஒருவர். கல்லூரி மேடைகளில் பாடல்கள் பாடி இசைகாண வாய்ப்புகளை தேடினார் SPB.

SPB-க்கு கிடைத்த முதல் அங்கீகாரம்
முதன் முதலாக 1964 ஆம் ஆண்டு தெலுங்கு கலாச்சார நிறுவனம் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சியில் அசத்தலாக பாடி முதல் பரிசைப் பெற்றார். இந்த முதல் பரிசு SP பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்க்கையில் முதல் படியாக அமைந்தது.

SPB சினிமாவில் முதல் வாய்ப்பு
- முதல் வாய்ப்பாக SPB தெலுங்கு மொழியில் – “ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா” என்ற படத்தில் பாடியுள்ளார்.
- தமிழில் முதலில் “ஹோட்டல் ரம்பா” என்ற படத்தில் பாடியுள்ளார், பல்வேறு காரணத்தால் இப்படல் வெளியாக வில்லை.
- 1969-ஆம் ஆண்டு சாந்தி நிலையம் என்ற படத்திலும் பாடியுள்ளார். ஆனால் MGR நடித்த “அடிமை பெண்” திரைபடம் தான் முதலில் வெளி ஆனது.

SPB சச்சின் ரசிகர், சச்சின் SPB ரசிகர்
கிரிக்கெட் என்பது SPB-க்கு உயிர் அதே போல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இவருக்கு மிகவும் பிடித்தவர் . அதே போல சச்சினும் SPB- யின் மிக பெரிய ரசிகர். SPB சச்சின் ரசிகர் என்று தெரிந்ததும் உடனே அவரது கையெழுத்து இட்ட பேட்டை SPB அவர்களுக்கு பரிசு அளித்துள்ளார்.

SPB அவர்களின் சாதனைகள்
நாற்பது ஆயிரத்திற்கும் மேல் பாடல்கள் பாடிய ஒரே பாடகர்.
பல வெவ்வேறு மொழிகள் 70 படங்களில் நடித்துள்ளார்
ஒரு இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கு, கனடா, ஹிந்தி மொழிகளில் இசை அமைத்துள்ளார்
16 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
கமல் ஹாசன் படங்கள் 120 மற்றும் ரஜினி படங்கள் 115 மொத்தம் 235 படங்களுக்கு இவர்களுக்கு மட்டும் தெலுங்கில்
டப்பிங் பேசியுள்ளார்.

ஒருநாளில் SPB செய்த மிரசிலே சாதனை
1981 ஆண்டு, கன்னட ஒளி பதிவாளர் உபேந்திரா குமார், அவர்களுக்கு ஒரே நாளில் 21 பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார்.
ஹிந்தியில் ஒரு நாளில் 16 – பாடல்கள் பாடி சாதனை
தமிழ்யில் 19 பாடல்கள் – 6 மணிநேரத்தில் பாடி சாதனை

SPB வென்ற விருதுகள்
- 6 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் SPB
- இந்தியாவின் உயரிய விருதான –இந்தியன் பிலிம் பெர்சோனாலிட்டி விருது பெற்றுள்ளார். இதை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவர்களும் பெற்றுள்ளார் – குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் – பத்மஸ்ரீ மற்றும் பதமபூசன் விருதுகளை பெற்றுள்ளார்.
ஆந்திரா அரசு வழங்கும் நந்தி திரை பட விருதுகளை பெற்றுள்ளார்.

SPB-யின் மரணம்
கோவிட் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று, இவருடைய உயிர் பிரிந்தது.
இவர் இறந்த செய்தியை அறிந்து இந்தியா முழுவதும்
கண்ணீர்தான், ஏனென்றால் இவர் கால் பாதிக்காத மொழி இல்லை, அதுமட்டும்மின்றி அணைத்து மொழிகளிலும் இவரது
குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
தமிழ் சினிமாக்கு இவரது இழப்பு மிக பெரிது, ரஜினி படம் என்றால் அவரது எனர்ஜி-க்கு ஈடுகொடுக்கும் முதல் பாடல் குரல் SPB தான்.
1970 முதல் 2023 வரை இவர்பாடிய பாடல்கள் என்றும் மக்கள் மனதில் இருக்கும். எத்தனை
தலைமுறைகள் வந்தாலும் இவரது காந்த குரலுக்கு அடிமை அவர்கள் என்பதுதான் உண்மை.

இவரது உயிர் பிரிந்தாலும் இவரின் இசை, இவர் பாடிய பாடல்கள் மற்றும் இவர் நடித்த படங்கள் என்றும் இந்த உலகில் வாழும்.
– வினோத் துரைராஜ்