2024-ஆம் ஆண்டில் இரண்டு ஆல்பம் பாடல்களின் மூலம், முதல் தமிழ் படம் வாய்ப்பு பெற்று தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகரான சூரிய 45வது படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைக்க உள்ளார் சாய் அபயங்கர் ( Music Director Sai Abhyankkar ).

சாய் அபயங்கர் ( Sai Abhyankkar ) பிறப்பு.

சென்னையில் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி திப்பு மற்றும் ஹரிணி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார் இவருடைய பெற்றோர்கள் இருவரும் பாடகர்கள் இவர்கள் தமிழ், கன்னடம்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல பாடல்களை பாடியுள்ளார்கள். இப்படிப்பட்ட இசை குடும்பத்தில் பிறந்து, இசையில் இளம் வயதில் உச்சம் தொட்டுள்ளார். தற்போது இவரது வயது 20ஆகும்.

முதல் அங்கீகாரம்

2024ஆம் ஆண்டு வெளியான “கட்சி சேர” என்ற பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது, இணையத்திலும் பெரிதும் கொண்டாடப்பட்டது மேலும் யூடியூபில் 135+ மில்லியன் பார்வைலர்களே கடந்தது. அந்த பாடலை தொடர்ந்த இதே ஆண்டில் வெளியான “ஆச கூட” என்ற பாடல் மிகவும் பெரிய வரவேற்பை பெற்று யூடியூபில் 150+ மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

முதல் வாய்ப்பு

2024ஆம் ஆண்டில் 2 ஆல்பம் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்ற படத்தில் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. தற்போது RJ, பாலாஜி இயக்கத்தில் சூரிய நடிக்கும் 45.வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.