தேனிசை தென்ற தேவா தொடக்கி கானா பாலா வரை தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு காதல் உண்டு, அந்த வகையில் தனது நண்பர்களுடன் தெரு ஓரங்களில் ஜாலியாக கானா பாடல்கள் பாடி திரிந்த ஒருவர்தான் தற்போது பிக் பாஸ் போட்டியாளராக பிரபலம் அடைந்த ஜெப்ப்பிரி.

ஜெப்பரி வாழ்க்கை

சென்னையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 16.07.2002-ல் பிறந்தவர்தான் கானா ஜெப்ப்பிரி. இவர் இசை மீது மிகவும் பற்று கொண்டவர் மற்றும் கால்பந்து விளையாட்டு சிறப்பாக ஆடுவார் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.

ஜெப்பரி வாழ்க்கையில் கானா வந்த தருணம்.

நண்பர்களுடன் அதிகமா நேரம் செலவிடும் ஜெப்பரி, அவர்களை அதிகமா கேலி கிண்டல் செய்யும் பழக்கம் உண்டு, அவ்வப்போது பாடல் வரிகள் மூலம் கிண்டல் செய்வார். அப்போது நண்பர்கள் நல்லா இருக்கு எதாவது சினிமா பாடல் பாடுடா டிங்கு ( செல்ல பெயர்) என்று சொல்ல எதார்த்தமாக ஒரு கானா பாடலை பாட அங்கு நண்பர்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைக்க, அதன் பின்னர் சொந்தமாக வார்த்தைகள் மூலம் கானா பாடல்கள் பாட தொடங்கினார்.

தனக்கான புகழ் கிடைத்த இடம்.

கானா பாடல்களை விளையாட்டாக பாடி கொண்டு இருந்த தருணத்தை நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட நண்பர்கள் மத்தியில் நல்லா வரவேற்ப்பு கிடைக்கவும். ஆகா இதுதான் சரி என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பாடல்களை பதிவிட்டு வந்தார்.

ஒரு பக்தி பயணம் வாழ்க்கையானது

நண்பர்களுடன் இணைந்து வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க நடைபயணமாக 10 நாட்கள் நடைபயணமாக சென்றார்கள். செல்லும் வழியில் மாதா குறித்தும், போகும் பயணத்தை குறித்தும் கானா பாடல்களாக பாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். அது இன்ஸ்டாகிராமில் நிறைய பார்வையாளர்களுக்கு சென்றடைந்தது. இதுதான் அவர் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் செல்ல டிக்கெட் ஆகா அமைந்தது.

பிக் பாஸ் பிரபலமாக ஜெப்ப்பிரி.

தெரு ஓரங்களில் கானா பாடிய ஜெப்ப்பிரிக்கு பிக் பாஸ் சீசன் 8 தனது திறமையால் வாய்ப்பு கிடைத்து தற்போது சிறப்பாக பங்காற்றி வருகிறார்.

Big Boss Jeffry Biography, gana Jeffry,