இலங்கை ஈழப் போரில் இருந்து உயிர் தப்பித்து இந்தியாவுக்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர் நடிகர் போண்டாமணி அவர்கள்.

Tamil Actor Pondamani Biography


நகைசுவை நடிகர்
“போண்டாமணி” இவர் 19 செப்டம்பர் 1963
இலங்கையில் பிறந்தார்இவர் தமிழ் திரையுலகில் வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 175 திரைப்படங்களுக்கு மேலும்,
ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் போண்டா மணி நடித்துள்ளார்.

இவருடைய இயற்பெயர்
கேதீஸ்வரன் என்பதாகும்.
இவருடன்
பிறந்தவர்கள்
16 பேர். அந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில்
இறந்து விட்டார்கள்.

போண்டாமணி ஒரு பேட்டியில் கூறியது  இலங்கையில் மளிகைக்
கடை நடத்தி வந்தார் என் அப்பா. எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து மொத்தம் 16 பிள்ளைகள்.
அதில், ஒருத்தர் குண்டடி பட்டு இறந்துட்டார். 5 பேர் படகில் போகும்போது அலை இழுத்துக்கிட்டு
கடல்ல கூட்டிக்கிட்டு போயிடுச்சு. ஒருசிலர் மட்டும்தான் மிஞ்சினோம். என்னை ஒருமுறை
சுட்டதில் என் இடது காலில் குண்டு துளைத்தது. பிறகு, சிங்கப்பூர் போயிட்டேன், அங்கே
ஒரு கடையில சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன்.

சென்னைக்கு வந்ததும்
‘மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு வாய்ப்புத் தேடினேன் என்று போண்டா
மணி கூறியுள்ளார்.
அதன் பின்னர் பல
போராட்ட்ங்கள்
பிறகு இயக்குனர் பாக்யராஜ் மூலமா கிடைத்த ‘பவுனு பவுனுதான்’
திரை படத்துல நடித்தார். படவாய்ப்பு இல்லாத நேரங்களில் இவர், பாண்டி பஜாரில் வாட்ச்மேனாகவும்
வேலை பார்த்திருக்கிறார்.

ரொம்ப நாட்களாக அவருக்கு எந்தவிதமான
குடியிருப்புச்
சான்று, வாக்காளர் அட்டை, சரியான இருப்பிடம் கிடைக்கவில்லை”
என்று வருத்தத்துடன்
கூறி இருந்தார்.

தற்போது சென்னையில் வசித்துவந்த நடிகர் போண்டா
மணி, திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்
போண்டா மணி உடல்நல குறைவு
காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலையில் இருந்தது.

அவரை மருத்துவமைக்கு சென்று மருத்துவத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
மேலும் பல நடிகர்கள் நலம்
விசாரித்தார்கள். 
நலமாகி விடுவார் என்று அனைவரும் நினைத்த தருணத்தில் 23.12.2023௩ அன்று உயிரிழந்தார்.

பல கஷ்டங்களை சந்தித்து போராட்டமான வழக்கை வாழ்ந்து
உயிரிழந்தார். இன்றும் இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையாக உள்ளது. இவர்
குடும்பத்திற்கு இனி திரைத்துறை ஆதரவு கொடுத்தால் நல்லது.